ஒரு வாரமாகியும் காங்.நிர்வாகிகளை சோனியா சந்திக்காதது ஏன் ?
ஒரு வாரமாகியும் காங்.நிர்வாகிகளை சோனியா சந்திக்காதது ஏன் ?
ஒரு வாரமாகியும் காங்.நிர்வாகிகளை சோனியா சந்திக்காதது ஏன் ?
UPDATED : செப் 13, 2011 11:32 AM
ADDED : செப் 13, 2011 10:57 AM
புதுடில்லி: உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை செய்து கொண்ட காங்.தலைவர் சோனியா 64,இந்தியா திரும்பி ஒரு வாரமாகியும் இன்னும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசவில்லை. எனினும் சோனியாவுக்கு முழு ஒய்வு தேவை என்பதால் அவரை தற்போது யாரும் சந்தித்து பேச அனுமதிக்கக்கூடாது என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அறுவைசிகிச்சை முடித்த சோனியா கடந்த 7 -ம் தேதி நள்ளிரவில் நாடு திரும்பினார். தற்போது டில்லி 10 ஜன்பத் தெருவில் காங்கிரஸ் தலைவர் சோனியா வீடு உள்ளது. அதன் அருகிலேயே பிரதமர் மன்மோகன்சிங் வீடும் உள்ளது. சோனியாவின் குடும்பத்தினர் தவிர கட்சியின் மூத்தநிர்வாகிகள் உள்பட யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. நாடு திரும்பி கடந்த ஒருவாரம் ஆன போதிலும் சோனியா மீடியாக்களுக்கும் பேட்டி தரவில்லை.
சோனியா உடல்நிலைகுறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பிரசாரம் செய்துவருகின்றனர். எனினும் அவர் அன்றாட அரசியல் சூழ்நிலைகள் குறித்து தினசரி வீட்டிலிருந்த படியே கவனித்துவருவதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். தற்போது சோனியா உடல் பூரண குணமடைந்துவிட்டது எனினும் முழு ஓய்வு தேவை என டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆகையால் அவர் யாரையும் சந்திக்க இயலாது என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


