Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"சூளேஸ்வரன்பட்டியில் 2வது குடிநீர் திட்டம்'

"சூளேஸ்வரன்பட்டியில் 2வது குடிநீர் திட்டம்'

"சூளேஸ்வரன்பட்டியில் 2வது குடிநீர் திட்டம்'

"சூளேஸ்வரன்பட்டியில் 2வது குடிநீர் திட்டம்'

ADDED : அக் 13, 2011 12:02 AM


Google News
பொள்ளாச்சி:'சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 2வது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், என, அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்து வருகிறார்.பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., - பா.ஜ., உட்பட ஏழு வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். இவர்களில், தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார் என்பதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.தலைவர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் கிராமங்களில் பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளார். அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்படும் தேர்தல் வாக்குறுதிகள்:சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பஞ்சத்தை போக்க முதல்வர் உத்தரவு பெற்று இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், குடிநீர் தட்டுபாடு சரி செய்யப்படும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன். அனைத்து பகுதிகளிலும் தரமான தார் சாலைகள், அமைக்கவும், தெருகளிலும் சாலை வசதிகளையும், தெரு விளக்கு வசதிகளையும் ஏற்படுத்துவேன்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களின் அடிப்படை வசதிகளை மையப்படுத்தி, பிரசாரம் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us