சிவகாசி மாணவன் கோர்ட்டில் ஆஜர்: தொடர் மிரட்டலால் போலீஸ் திணறல்
சிவகாசி மாணவன் கோர்ட்டில் ஆஜர்: தொடர் மிரட்டலால் போலீஸ் திணறல்
சிவகாசி மாணவன் கோர்ட்டில் ஆஜர்: தொடர் மிரட்டலால் போலீஸ் திணறல்
சிவகாசி: சிவகாசி மாணவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெற்றோரிடம் ஒப்படைத்த பின்பும், தொடரும் மொபைல் போன் மிரட்டலால் போலீசார் திணறுகின்றனர்.
சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் ரமேஷ்பாண்டியன் மகன் கோடீஸ்வரன்,14.
ராங்க் கால் படுத்தும் பாடு...: மாணவன் கோடிஸ்வரன் ,வீட்டில் கோபித்துகொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மகன் காணாமல் போன குழப்பத்தில் இருந்த ரமேஷ்பாண்டியன் மொபைல் போனுக்கு , அழைப்பு வந்தது. இந்தியில் பேசியதால்,அவரால் புரிய முடியவில்லை . இந்தி தெரிந்த நண்பர் மூலம், அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, இவர்களாகவே மாணவன் காணாமல் போனதை கூற, ராங்க் கால் அழைப்பை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர் , ரமேஷ்பாண்டியனிடம் பணம் பறிக்க , முயன்றிருக்கலாம், என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, நேற்று காலையில் இந்தியில் பேசியவரிடம் தொடர்பு கொண்ட போலீசார், 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கி கொள், மாணவனை எங்களிடம் பேச சொல் என்றனர். அதற்கு,'' மாணவன் மீது வெந்நீரை ஊற்றி விட்டோம் அவனால் பேச முடியாது,'' என்றுள்ளான். இதை தொடர்ந்து போலீசார் சந்தேகம் வலுத்துள்ளது.


