ADDED : ஜூலை 13, 2011 03:27 AM
பெருந்துறை: பெருந்துறை பவானி ரோடு, பாரதி நகரைச் சேர்ந்த சென்னி மகன்
பிரகாஷ் (25); காய்கறி வியாபாரி.
நேற்று காலை சந்தைக்கு சென்ற இவரை, பழைய
பஸ் ஸ்டாண்ட் அருகே கத்தியைக் காட்டி வழிமறித்த ஒருவர், பணத்தை பறிக்க
முயன்றார். பிரகாஷ் சத்தம் போடவே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து,
அந்த வாலிபரை பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர்.பெருந்துறை போலீஸார்
விசாரணையில், பிடிபட்டவர் வீரப்பன் சத்திரம் சுப்பிரமணி மகன் மூர்த்தி (35 )
என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், பெருந்துறை
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூர்த்தியை 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி
ரவி உத்தரவிட்டார்.


