Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொடைக்கானலில் லாட்டரி கஞ்சா விற்பனை அட்டூழியம்: மகிழ்ச்சி நாடும் பயணிகள் முகம் சுளிப்பு

கொடைக்கானலில் லாட்டரி கஞ்சா விற்பனை அட்டூழியம்: மகிழ்ச்சி நாடும் பயணிகள் முகம் சுளிப்பு

கொடைக்கானலில் லாட்டரி கஞ்சா விற்பனை அட்டூழியம்: மகிழ்ச்சி நாடும் பயணிகள் முகம் சுளிப்பு

கொடைக்கானலில் லாட்டரி கஞ்சா விற்பனை அட்டூழியம்: மகிழ்ச்சி நாடும் பயணிகள் முகம் சுளிப்பு

ADDED : ஜூலை 13, 2011 02:54 AM


Google News
கொடைக்கானல் : கொடைக்கானலில் லாட்டரி, கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த சந்திரசேகரன் எஸ்.பி., சாட்டையை சுழற்ற வேண்டும். சர்வதேச சுற்றுலா நகரமான இங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அனுமதியில்லாத காட்டேஜ்களில் அடாவடி கட்டண வசூல், சுற்றுலா இடங்களில் அடிப்படை வசதியின்மை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம். கடைக்கோடி கிராமான கிளாவரையில் இருந்து 5 கி.மீ., ல், கேரள எல்லை உள்ளது. அங்கிருந்து லாட்டரி சீட்டுக்கள் புரோக்கர்கள் மூலம் சப்ளையாகிறது. இங்குள்ள அண்ணா சாலை, மூஞ்சிக்கல், காமராஜபுரத்தில் லாட்டரி விற்பனை சூடுபிடிக்கிறது. இதற்கு போலீசாரின் பூரண ஆசியும் உண்டு. லாட்டரி விற்போர், பயணிகளை வாங்குமாறு நச்சரிக்கின்றனர். ஏரிச்சாலை பகுதியில் இவர்கள் தொல்லை அதிகம். இதே போல கஞ்சா விற்பனையும் கட்டுங்கடங்காமல் களை கட்டியுள்ளது. இவற்றால், மகிழ்ச்சியை நாடி வரும் பயணிகள் முகம் சுளிக்க நேரிடுகிறது. இச்சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்.பி., முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு துணை போகும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us