ADDED : ஜூலை 13, 2011 02:38 AM
திருப்பாச்சேத்தி: கொத்தங்குளம் கிராமத்தினருக்கும், முதுவன்திடல் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்சில் தகராறு ஏற்பட்டது.
கொத்தங்குளத்தை சேர்ந்தவர்கள் முதுவன் திடலை சேர்ந்தவர்களை தாக்கினர். இதனையடுத்து நேற்று காலை மேலசொரிக்குளம் பஸ்சை வழிமறித்து கொத்தங்குளம் கிராமத்தினருடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பிலும் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கொத்தங்குளத்தை சேர்ந்த சுந்தரேஸ்வரன் (18). வெங்கடேஸ்வரன் (28), சீனிவாசன் (37), சந்திரன் (42), யோகநாதன் (31), அய்யனார் (18), பவுன்ராஜ் (19), தெய்வேந்திரன் (24), பூமிநாதன் (21) உள்ளிட்ட 9 பேரையும், முதுவன்திடலை சேர்ந்த ராஜ்குமார் (20), மாயாண்டி (40) இரண்டு பேரையும் திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 26 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .


