Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில்களில் கல்லூரி மாணவர்களை அவமதித்து வசூலிக்கும் அரவாணிகள்

ரயில்களில் கல்லூரி மாணவர்களை அவமதித்து வசூலிக்கும் அரவாணிகள்

ரயில்களில் கல்லூரி மாணவர்களை அவமதித்து வசூலிக்கும் அரவாணிகள்

ரயில்களில் கல்லூரி மாணவர்களை அவமதித்து வசூலிக்கும் அரவாணிகள்

ADDED : அக் 07, 2011 12:55 AM


Google News

பெரம்பூர் : புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களை, அரவாணிகள் அவமதித்து, பணம் பறிப்பதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், தினசரி லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்த ரயில்களில் காலை மாலை நேரங்களில், வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், செவ்வாப்பேட்டை, புட்லூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களிலும், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் அரவாணிகள் கூட்டமாக ஏறுகின்றனர். இவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடம் சென்று பணம் கேட்கும் போது, அவர்களது சட்டை பைகளில் கை விடுகின்றனர். பணம் இல்லையென்றால், 'பாக்கெட்டில் பத்து ரூபாய் இல்லை. பந்தாவா பேண்ட், சட்டை போட்டு வந்துட்டே' என அவமதிப்பதுடன், 'தேர்வில் பெயிலாயிடுவே, உனக்கு ஆபத்து வரும்' என மாணவர்களுக்கு சாபமிடுகின்றனர்.



சில மாணவர்கள் இதை ஜாலியாக எடுத்துக் கொள்கின்றனர். ஒரு சில மாணவர்கள் பலர் முன்னிலையில் அவமானப்பட்டதாக கருதி நொந்து போகின்றனர். இதே போல், பொதுமக்களிடமும், மிரட்டி பணம் கேட்கின்றனர். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதுடன், பல்வேறு டென்ஷனில் செல்பவர்களிடம் அத்துமீறும் அரவாணிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகரிடம் கேட்டபோது, 'தற்போது சென்ட்ரலில் இருந்து புறப்படும் மின்சார ரயில்களில், 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரயிலிலும் போலீசார் பயணித்து, பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். அரவாணிகள் தொந்தரவு குறித்து, பயணிகள் புகார் கூறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us