/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடியில் 17 சதவீதம் பதட்டம் நிறைந்தவை என கண்டுபிடிப்புதூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடியில் 17 சதவீதம் பதட்டம் நிறைந்தவை என கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடியில் 17 சதவீதம் பதட்டம் நிறைந்தவை என கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடியில் 17 சதவீதம் பதட்டம் நிறைந்தவை என கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடியில் 17 சதவீதம் பதட்டம் நிறைந்தவை என கண்டுபிடிப்பு
ADDED : அக் 08, 2011 01:48 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளில் 17 சதவீத வாக்குச்சாவடி பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது பதவியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தும் வேட்பாளர்கள் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 385 வாக்குச்சாவடிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 2,385 வாக்குச்சாவடிகளில் 400 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அன்று கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும், வாக்குப்பதிவினையும், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி தனவேல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரிரு நாளில் வருவார் என்று தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன. தனவேல் நெல்லை மாவட்ட கலெக்டராகவும், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.


