Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாஜி தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வீடு- கல்லூரிகளில் ரெய்டு

மாஜி தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வீடு- கல்லூரிகளில் ரெய்டு

மாஜி தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வீடு- கல்லூரிகளில் ரெய்டு

மாஜி தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வீடு- கல்லூரிகளில் ரெய்டு

UPDATED : அக் 04, 2011 11:28 AMADDED : அக் 04, 2011 09:25 AM


Google News
Latest Tamil News

சிதம்பரம்: தி.மு.க., ஆட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.



கடந்த ஆட்சியில் அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நில அபகரிப்பு, மோசடி வழக்குகள் தூசி தட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக மாஜி அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், என்கே.கே.பி., ராஜா, மற்றும் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்றத்தூரில் உள்ள டி.எம்., அன்பரசன் வீட்டில் ரெய்டு நடந்தது.



இந்நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் போலீசார் பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடத்தினர். பல குழுக்களாக பிரிந்து வந்த போலீசார் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி முட்டத்தில் உள்ள அவரது வீடு, சிதம்பரத்தில் உள்ள அவரது சகோதரி வீடு, பொறியியற்கல்லூரி ( நாட்டார்மங்கலம் ) , காட்டுமன்னார்குடியில் உள்ள ஜவுளிகடை, கலைக்கல்லூரி மற்றும் வடலூர் உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள தி.மு.க,.வினர் அதிர்ச்சியில் உறைந்து போய்உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us