/உள்ளூர் செய்திகள்/சேலம்/தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி : மனு கொடுத்த வாலிபரால் பரபரப்புதற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி : மனு கொடுத்த வாலிபரால் பரபரப்பு
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி : மனு கொடுத்த வாலிபரால் பரபரப்பு
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி : மனு கொடுத்த வாலிபரால் பரபரப்பு
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி : மனு கொடுத்த வாலிபரால் பரபரப்பு
ADDED : செப் 06, 2011 01:26 AM
சேலம்: விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது
நடவடிக்கை எடுக்காததால், தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என,
கலெக்டரிடம் மனு அளித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட
கலெக்டர் மகரபூஷணத்திடம், தர்மலிங்கம் என்பவர் அளித்த மனு விபரம்: சேலம்,
புத்தூர் அக்ரஹாரம் இச்சிமரக்காடு பகுதியில், வெள்ளித் தொழில் செய்து
பிழைத்து வருகிறேன். வீரபாண்டி கோரைக்காடு அரியானூரில், எனக்கு சொந்தமான
ஐந்து சென்ட் நிலம் உள்ளது. அதே பகுதியில் உள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த
ஆறுமுகம் என்பவர், போலி பட்டா தயார் செய்து, அங்குள்ள ரவுடிகளை வைத்து கொலை
மிரட்டல் விடுத்து வருகிறார். அவர், அத்துமீறி எனது நிலத்தில் வீடு
கட்டுவதையும், நிலத்தின் பேரில் சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு
உள்ளதையும், மாவட்ட எஸ்.பி., கவனத்துக்கு நேரடியாகவும், புகாராகவும்
தெரிவித்துள்ளேன். ஆட்டையாம்பட்டி போலீஸாருக்கு எஸ்.பி., தகவல்
அனுப்பினார். அங்கு, போலீஸ் எஸ்.ஐ., ராஜு, சம்மந்தப்பட்டவர்களை அழைத்து,
மிரட்டுவதுபோல் பேசிவிட்டு, பின், மேல் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தால்,
பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன், என்று என்னை மிரட்டி அனுப்பினார்.
மிரட்டல் விடுக்கும் ஆறுமுகம், மாதப்பன், எஸ்.ஐ., ராஜு ஆகியோர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை
செய்து கொள்ள, கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் கூறியுள்ளார்.


