/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்து கால் கழுவிய மாணவியின் உடல் வெந்ததுதண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்து கால் கழுவிய மாணவியின் உடல் வெந்தது
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்து கால் கழுவிய மாணவியின் உடல் வெந்தது
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்து கால் கழுவிய மாணவியின் உடல் வெந்தது
தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்து கால் கழுவிய மாணவியின் உடல் வெந்தது
ADDED : ஆக 28, 2011 01:02 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பாத்ரூமில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டால் கால் கழுவிய மாணவியின் உடல் வெந்தது.
இது குறித்து மாணவியின் தரப்பில் கூறப்படுவதாவது: புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாலட்சுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் தனது தாயை கவனித்துக்கொள்வதற்காக அவரது மகள் சாவித்திரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். சம்பவத்தன்று சாவித்திரி அங்குள்ள டாய்லெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து கால்கழுவியுள்ளார்.
இதில் இரண்டு கால்களும் வெந்து புண்ணாகியது. ஆசிட் காலில்பட்டதும் சாவித்திரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி.,யிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


