Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வருகிறது ஆயுதபூஜை திருவிழா ஜெட் வேகத்தில் பூக்கள் விலை

வருகிறது ஆயுதபூஜை திருவிழா ஜெட் வேகத்தில் பூக்கள் விலை

வருகிறது ஆயுதபூஜை திருவிழா ஜெட் வேகத்தில் பூக்கள் விலை

வருகிறது ஆயுதபூஜை திருவிழா ஜெட் வேகத்தில் பூக்கள் விலை

ADDED : செப் 28, 2011 11:47 PM


Google News

கரூர்: 'நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுத பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பூக்களின் விலை மேலும் உயரும் என தெரிகிறது. கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மாரியம்மன் பூ மார்க்கெட்டுக்கு கரூர், மாயனூர், லாலாப்பேட்டை, மாயனூர், குளித்தலை, லந்தக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மல்லிகை, முல்லை, சம்பங்கி, துளசி, ஜாதிப்பூ, கனகாம்பரம், காக்கரட்டான், ரோஜா உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். பூக்கள் சீசன் காரணமாக கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ மல்லிகை பூ 40 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விற்று வந்தது. நவராத்திரி சீஸன் துவங்கியதாலும், பூக்கள் சீசன் முடிவடைவதாலும் ஒரு கிலோ மல்லிகை பூ 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல் 100 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்கப்பட்ட முல்லைப்பூ தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ ஆகிய பூக்களின் சீசன் முடிவடைந்து வருவதாலும், மழை வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து ஆயுதபூஜை, தீபாவளி மற்றும் திருமண சீசன் தொடங்குவதால், வரும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என கரூர் பூ மார்க்கெட் செயலாளர் மோகன் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us