/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் கேம்பஸ் இன்டர்வியூபி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் கேம்பஸ் இன்டர்வியூ
பி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் கேம்பஸ் இன்டர்வியூ
பி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் கேம்பஸ் இன்டர்வியூ
பி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் கேம்பஸ் இன்டர்வியூ
ADDED : ஜூலை 13, 2011 03:35 AM
நாமக்கல்: பி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.நாமக்கல் பி.ஜி.பி., ஐ.டி.ஐ.,யில் இந்த ஆண்டு பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு, முழு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பல்வேறு நிறுவனங்களின் சார்பில், கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.அதில், அசோக் லைலேண்ட், நாமக்கல் டிரான்ஸ்போர்ட் கேரியர்ஸ், செல்வம் ஹேச்சரீஸ், ஜெய்பூர் ஸ்பிரிங், ரிமேன் இன்ஜினியரிங் ஒர்க்ஸ், அருணா மோட்டார் ஆகிய பிரபல நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று இன்டர்வியூ நடத்தினர்.மூன்று கட்டமாக நடந்த தேர்வு முடிவில், எலக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், பிட்டர் மறறும் பிளம்பர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கல்வி நிறுவனத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


