/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஜெனிவா ஒப்பந்த நாள் தென்காசியில் பேரணிஜெனிவா ஒப்பந்த நாள் தென்காசியில் பேரணி
ஜெனிவா ஒப்பந்த நாள் தென்காசியில் பேரணி
ஜெனிவா ஒப்பந்த நாள் தென்காசியில் பேரணி
ஜெனிவா ஒப்பந்த நாள் தென்காசியில் பேரணி
ADDED : ஆக 13, 2011 01:26 AM
தென்காசி : ஜெனிவா ஒப்பந்த நாளை முன்னிட்டு தென்காசியில் ரெட்கிராஸ்
சார்பில் பேரணி நடந்தது.
ஜெனிவா ஒப்பந்த நாளை முன்னிட்டு இந்தியன்
ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் தென்காசியில் பேரணி மற்றும் கூட்டம்
நடத்தப்பட்டது. தென்காசி வேன் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணிக்கு
ரெட்கிராஸ் துணைத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். தென்காசி கல்வி
மாவட்ட ஓய்.ஆர்.சி.கன்வீனர் பிரேமாவதி முன்னிலை வகித்தார். தென்காசி
டி.எஸ்.பி.,பாண்டியராஜன் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி ரதவீதிகள்,
யானைப்பாலம் டிராபிக் சிக்னல், பழைய பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ரோடு வழியே
மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றது. பள்ளி வளாகத்தில்
நடந்த கூட்டத்திற்கு டி.எஸ்.பி.பாண்டியராஜன் தலைமை வகித்து சான்றிதழ்
வழங்கி பேசினார். கன்வீனர் பிரேமாவதி மற்றும் பலர் பேசினர். பேரணி மற்றும்
கூட்டத்தில் தென்காசி செந்திலாண்டனர் பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீராம்
நல்லமணி யாதவா கல்லூரி, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி, பாவூர்சத்திரம்
சத்யபாலா பாராமெடிக்கல் கல்லூரி, புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப் பள்ளி,
இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, லட்சுமி அரிகரா உயர்நிலைப் பள்ளி
இளம் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
தொகுத்து வழங்கிய இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் சுப்பிரமணியன்
நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் குளிர்பானங்கள், நோன்பு கஞ்சி,
பழங்கள் வழங்கப்பட்டன.


