ADDED : ஆக 28, 2011 11:48 PM
குறிச்சி : 'கோவை மாடலர்ஸ் கிளப்' மற்றும் 'ஜாய் ரைடிங் ஹாபி' சார்பில்,
தேசிய அளவிலான ரேடியோ கன்ட்ரோல் கார் பந்தயம் நடந்தது.ஈச்சனாரி -
செட்டிபாளையம் ரோட்டிலுள்ள ஜி.டி., டிரைவிங் பள்ளி வளாகத்தில், நைட்ரோ
பக்கி மற்றும் டிரக்கி, மான்ஸ்டர் டிரக், எலக்ட்ரிக் ஓபன் மற்றும் பாஜா
கிளாஸ் பிரிவுகளில் பந்தயம் நடந்தது. ஒவ்வொரு பந்தயத்துக்கும் 15
நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன; இக்குறிப்பிட்ட நேரத்தில் பந்தய டிராக்கை அதிக
சுற்றுகள் வரும் கார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நைட்ரோ பக்கி
பிரிவில், அபிஷேக், ஜோசப், அசோக்குமார் ஆகியோரும், நைட்ரோ டிரக்கி
பிரிவில், சித்தார்த், ஷானே, பாரத் ஆகியோரும், மான்ஸ்டர் டிரக் பிரிவில்,
கபில், ஜோசப், அங்குஷ் ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
எலக்ட்ரிக் ஓபன் பிரிவில், சித்தார்த், ஷானே, ஜோசப் ஆகியோரும், பாஜா கிளாஸ்
பிரிவில் உத்தம், மாஸ்டர் நிதின், முராரி ஆகியோரும் முறையே முதல் மூன்று
இடங்களை பிடித்தனர். கோவையில் முதல்முறையாக நடந்த இப்பந்தயத்தில் சென்னை,
பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டில்லி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 40
வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று
பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவருக்கு கேடயத்தை, 'கோவை
மாடலர்ஸ் கிளப்' இயக்குனர் ராஜ்குமார், வி.இ.ஏ., நிறுவனத்தின் பாலு,
சுந்தரம், ஸ்பிளிட் பயர் நிறுவனத்தின் பாலமுருகன், ஜி.எஸ்.பி.,
நிறுவனத்தின் ரங்கராஜு ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை, ஜி பிளாஸ்ட் நிறுவன
மேலாளர் ரமேஷ்கண்ணன் செய்திருந்தார்.


