அய்யப்பனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
அய்யப்பனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
அய்யப்பனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
ADDED : ஜூலை 14, 2011 08:35 PM
சென்னை: 'தீராத விளையாட்டு பிள்ளை' பட விவகாரம் தொடர்பாக, 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் கூட்டாளி அய்யப்பனை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.
சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் சண்முகவேல், புகார் படி சக்சேனா அவரது கூட்டாளி அய்யப்பன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் அய்யப்பனை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை, அரசு வழக்கறிஞர் கோபிநாத் தாக்கல் செய்தார். அய்யப்பனை, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.


