நீலிமாவுக்கு விசா வழங்கியது அமெரிக்கா
நீலிமாவுக்கு விசா வழங்கியது அமெரிக்கா
நீலிமாவுக்கு விசா வழங்கியது அமெரிக்கா
ADDED : அக் 04, 2011 04:19 AM
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகி நீலீமா அமெரிக்கா செல்வதற்கானவிசாவை அமெரி்க்க தூதரகம் வழங்கியது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்நதவர் பிரபல சமூக சேவகி நீலிமா. இவர் மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து சேவை புரிந்து வந்தார். இவரின் சேவையை பாராட்டி 2011-ம்ஆண்டுக்கான மகாசேஷே விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற உள்ள சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு செல்ல விண்ணப்பித்த விசாவில் பிழை இருப்பதை கண்ட அமெரிக்க தூதரகம் விசா வழங்க மறுப்பு தெரிவித்தது. பின்னர் புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான அனுமதியை அமெரிக்க தூதரகம் வழங்கியது. இதனால் நீலிமாவின் விசா பிரச்னை முடிவுக்கு வந்தது.


