Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

ADDED : செப் 07, 2011 02:45 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் மற்றும் சாமபந்தியில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது, விரைவில் நடவடிக்கை எடுத்து, ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என, கலெக்டர் லில்லி உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மீதும், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் சமாபந்தி ஆகியவற்றில் பெறப்படும் மனுக்கள் மீதும், துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் பதிலை தெரிவிக்க வேண்டும். அரசின் சாதனைகளை விளக்கி வெளிவரும் தமிழ அரசு இதழை, அனைவரும் பெற்று பயனடையும் வகையில் அந்தந்த துறை அரசு அலுவலர்கள் குறிப்பிட்ட சந்தாவினை முனைப்புடன் ஒரு மாதத்துக்குள் சேர்க்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைத்தீர்நாள் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். தங்களுக்கு கீழ் உள்ள அலுவலர்களை அனுப்ப கூடாது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us