/உள்ளூர் செய்திகள்/சேலம்/விஷ முறிவு சிகிச்சை டாக்டருக்கு விருதுவிஷ முறிவு சிகிச்சை டாக்டருக்கு விருது
விஷ முறிவு சிகிச்சை டாக்டருக்கு விருது
விஷ முறிவு சிகிச்சை டாக்டருக்கு விருது
விஷ முறிவு சிகிச்சை டாக்டருக்கு விருது
ADDED : ஜூலை 13, 2011 03:28 AM
சேலம்: தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில், கடந்த வாரம் டாக்டர்கள் கருத்தரங்கம் நடந்தது.
உலக நாடுகளை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.இந்தியா சார்பில், இந்திய பிரதிநிதியாக சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் விஷ முறிவு மருத்துவ நிபுணராக பணியாற்றும் செந்தில்குமரன் அழைக்கப்பட்டிருந்தார். அவர், 2004ல் தமிழகத்தில் நடந்த சுனாமி பேரழிவின் போது, தான் ஆற்றிய 'உயிர் காக்கும் அவசர சிகிச்சை' மற்றும் விஷமுறிவு முறைகளை எடுத்துக் கூறினார்.கருத்தரங்கில் டாக்டர் செந்தில்குமரனுக்கு, சம்ச்சை கெனன்சூட் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்று சேலம் திரும்பிய டாக்டர் செந்தில்குமரனுக்கு, டாக்டர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


