Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் அதிகாரிகள் ஊழியர்களாக நியமனம்

தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் அதிகாரிகள் ஊழியர்களாக நியமனம்

தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் அதிகாரிகள் ஊழியர்களாக நியமனம்

தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் அதிகாரிகள் ஊழியர்களாக நியமனம்

ADDED : அக் 07, 2011 10:52 PM


Google News

சிவகங்கை : தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் சம்பள அடிப்படையில் பணி உத்தரவு வழங்காததால், பணி ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.சிவகங்கையில் ஓட்டு பதிவு செய்யும் மையத்தில் பணி செய்ய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

அதில் திட்ட இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி ஓட்டுச்சாவடி உதவி அலுவலராகவும், உதவியாளர் நிலையில் உள்ளவர் மண்டல அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு சாவடியில் தலைமை தேர்தல் அலுவலர் முதல் உதவியாளர் பணி (மை வைப்பவர்) வரை பணியாளர் நியமனம் அவரது சம்பள அடிப்படையில் நியமனம் செய்யப்படும். பணி நியமன உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது:ரேண்டம் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதை சரிபார்க்கும் பணி நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) அலுவலகத்தில் வழங்கப்பட்டது. உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யாமல் அனுப்பியதால் இது போன்ற தவறு நடந்துள்ளது. தற்போது மீண்டும் பணி நியமன உத்தரவு தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றனர்.தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ''கிரேடு பே அடிப்படையில் மண்டல அலுவலர், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர், உதவியாளர் பணி நியமனம் செய்ய வேண்டும். உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து அலுவலர்களின் புள்ளி விபரம் தவறாக கொடுக்கப்பட்டதால், இதுபோன்ற குளறுபடி நடந்துள்ளது. தற்போது பணியாளர் சம்பள அடிப்படையில் பணியிடம் தாயரிக்கப்பட்டுவருகிறது. நாளை அனைவருக்கும் பணியிடம் குறித்த தகவல் வழங்கப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us