ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
திருப்பூர் : சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி,
டி.ஒய்.எப்.ஐ., சார்பில், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புது பஸ்
ஸ்டாண்ட் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாநகர செயலாளர் ராஜேஷ்
தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஆனந்தன், செயலாளர் வடிவேல் முன்னிலை
வகித்தனர். 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சமச்சீர் கல்வியை உடனே
அமல்படுத்த வேண்டும்; அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஆக., 3க்குள்
புத்தகம் வழங்க வேண்டும். சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணம்
வசூலிக்கின்றன. அப்பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


