/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி ஐகோர்ட்டில் மனு :கலெக்டருக்கு உத்தரவுதேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி ஐகோர்ட்டில் மனு :கலெக்டருக்கு உத்தரவு
தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி ஐகோர்ட்டில் மனு :கலெக்டருக்கு உத்தரவு
தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி ஐகோர்ட்டில் மனு :கலெக்டருக்கு உத்தரவு
தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி ஐகோர்ட்டில் மனு :கலெக்டருக்கு உத்தரவு
ADDED : அக் 13, 2011 01:39 AM
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழமுதலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
மூன்று கிராமங்களில் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்த கோரிய மனு குறித்து
பதிலளிக்க கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியது.
உசிலம்பட்டி கீழப்பட்டியை சேர்ந்த ஒச்சாத்தேவர் தாக்கல் செய்த பொது நல மனு:
கீழமுதலைப்பட்டி ஊராட்சியில் 9 கிராமங்கள் உள்ளன. நடுவன்பட்டி,
கொசவப்பட்டி, முதலைகுளத்தில் மக்கள் விருப்பப்படி வேட்பாளர்களை தேர்வு
செய்ய முடியாத நிலையுள்ளது. ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் கணேசன், 3
கிராம ஓட்டுக்களை அவரே பதிவு செய்ய முயற்சித்து வருகிறார். கடந்த முறை
அவரது உறவினர் தலைவருக்கு போட்டியிட்டார். அவரும் இதே நடைமுறையை பின்பற்றி
ஓட்டுக்களை பதிவு செய்தார். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
தற்போதும் கணேசன் செயல்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார்
கொடுத்தும் நடவடிக்கை இல்லை. புகார் கொடுத்ததால், கணேசன் மிரட்டி
வருகிறார். நேர்மையான தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும், என
தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆனந்தக்குமார் ஆஜரானார்.
நீதிபதிகள் ஜெயச் சந்திரன், பெரியகருப்பையா பெஞ்ச், மனு குறித்து பதிலளிக்க
கலெக்டர், எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிட்டது.


