/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோவையில் ஆடிட்டர்கள் கருத்தரங்கு பங்கேற்க ஆன் - லைனில் பதியலாம்கோவையில் ஆடிட்டர்கள் கருத்தரங்கு பங்கேற்க ஆன் - லைனில் பதியலாம்
கோவையில் ஆடிட்டர்கள் கருத்தரங்கு பங்கேற்க ஆன் - லைனில் பதியலாம்
கோவையில் ஆடிட்டர்கள் கருத்தரங்கு பங்கேற்க ஆன் - லைனில் பதியலாம்
கோவையில் ஆடிட்டர்கள் கருத்தரங்கு பங்கேற்க ஆன் - லைனில் பதியலாம்
ADDED : ஆக 09, 2011 02:20 AM
சென்னை : ''ஐ.சி.ஏ.ஐ., - எஸ்.ஐ.ஆர்.சி., சார்பில் கோவையில் நடக்கும் பட்டயக்கணக்கர்கள் (ஆடிட்டர்கள்) கருத்தரங்கில் பங்கேற்க, ஆன் - லைனில் பதிவு செய்யலாம்'' என, எஸ்.ஐ.
ஆர்.சி., தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இந்திய பட்டயக்கணக்கர்கள் நிறுவனம் (ICAI Institute of Chartered Accountants of India தென்னிந்திய மண்டலக்குழு, சார்பில், 43வது மண்டலக் கருத்தரங்கு கோவை, கொடீசியா வளாகத்தில் வரும் 19ம் தேதி துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.ஐ.சி.ஏ.ஐ., தென்மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கருத்தரங்கைத் துவக்கி வைக்கிறார்.முதல் நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கில், ஆடிட்டர் குருமூர்த்தி, 'இந்திய பொருளாதார சீர்திருத்த அனுபவம்' என்ற தலைப்பில் பேசுகிறார். 'ஐ.சி.ஏ.ஐ.,யின் முயற்சிகள்' என்ற தலைப்பில், ஐ.சி.ஏ.ஐ., தலைவர் ராமசாமி பேசுகிறார்.மேலும் விவரங்களுக்கு www.sircoficai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புபவர்கள், இத்தளத்திலேயே ஆன் - லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவும்; பதிவுக்கட்டணத்தை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு சண்முகசுந்தரம் தெரிவித்தார்.ஹேக்கிங் குரு வருகிறார்!சண்முகசுந்தரம் மேலும் கூறுகையில், ''மிக இளம்வயதிலேயே 'எதிக்கல் ஹேக்கிங்' எனும் கம்ப்யூட்டரில் அடுத்தவர்களின் விஷயங்களை, ஹேக் செய்யும் துறையில் நிபுணத்துவம் பெற்ற, அங்கித் பாடியா இக்கருத்தரங்கின் இரண்டாம் நாளில் பேசுகிறார்,'' என்றார்.


