/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/செந்தூரில் தானியங்கி சிக்னல் விளக்குசெந்தூரில் தானியங்கி சிக்னல் விளக்கு
செந்தூரில் தானியங்கி சிக்னல் விளக்கு
செந்தூரில் தானியங்கி சிக்னல் விளக்கு
செந்தூரில் தானியங்கி சிக்னல் விளக்கு
ADDED : செப் 01, 2011 02:03 AM
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் சிக்னல் விளக்கை ஏடிஎஸ்பி., சுவாமி துரைவேலு துவக்கி வைத்தார்.
திருச்செந்தூர் இரும்பு ஆர்ச்சில் போக்குவரத்து தானியங்கி சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடந்தது. இதற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி., ஞானசேகரன் தலைமை வகித்தார். இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி., சுவாமி துரைவேலு கலந்து கொண்டு சிக்னல் விளக்கை துவக்கி வைத்தார். பின்னர் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.


