மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள்
மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள்
மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள்
ADDED : ஜூலை 28, 2011 03:32 AM
மதுரை : ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக மதுரையில் இருந்து
ராமேஸ்வரத்திற்கு ஜூலை 30ல் இரண்டு சிறப்பு ரயில்கள்
இயக்கப்படுகிறது.சிறப்பு ரயில் காலை 5.45 மணிக்கு மதுரையில் இருந்து
புறப்பட்டு, காலை 8.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
அங்கிருந்து பகல் 1
மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில்
மானாமதுரை, பரமகுடி, ராமநாதபுரம், மண்டபம் நிறுத்தங்களில் நின்று
செல்லும்.பாசஞ்சர் ரயில்: ஜூலை 30ல் காலை 9.10 மணிக்கு மதுரையில் இருந்து
புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இந்த ரயில்
அங்கிருந்து பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு, 5.55 மணிக்கு மதுரை வந்தடையும்.
இந்த ரயில் சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி, மானாமதுரை, சூடியூர்,
பரமகுடி, சத்திரகுடி, ராமநாதபுரம், உச்சிபுளி, மண்டபம் கேம்ப், பாம்பன்
நிறுத்தங்களில் நின்று செல்லும், என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


