/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தாகூர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கவிழாதாகூர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கவிழா
தாகூர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கவிழா
தாகூர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கவிழா
தாகூர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கவிழா
ADDED : ஆக 22, 2011 01:03 AM
புதுச்சேரி : தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்ப்பேரவையின் 40ம் ஆண்டு துவக்க
விழா மற்றும் ஆய்வரங்கம் நடந்தது.
புதுச்சேரியில் உள்ள தாகூர் கலை
மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக தமிழியல் துறையில்
தமிழ்ப்பேரவை துவக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று பேரவையின் 40ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. தமிழ்ப் பேரவை
பொறுப்பாளர் குழந்தைசாமி வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் பத்மாசனி தலைமை
தாங்கி பேரவையின் நோக்கங்கள், செயல்பாடுகளை எடுத்துரைத்தார். இதனையடுத்து
ஆய்வரங்கம் நடந்தது. இதில் முனைவர் செல்வம் 'ஒலியுறுப்புகளும்
ஒலியன்களும்' என்ற தலைப்பில் மொழியியல் ஆய்வுக் கட்டுரையும், முனைவர் மணி
'சங்க இலக்கியக் காட்சிகள்' என்ற தலைப்பில் இலக்கிய ஆய்வுக் கட்டுரையும்
வழங்கினார். விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள்
பங்கேற்றனர்.


