Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/எமனேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா பிரசாரம்

எமனேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா பிரசாரம்

எமனேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா பிரசாரம்

எமனேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா பிரசாரம்

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

பரமக்குடி : 'எமனேஸ்வரத்தில் அரசு மருத்துவமனை நிறுவ பாடுபடுவேன்' என பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கீர்த்திகா உறுதி அளித்தார்.

எமனேஸ்வரம், ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடப்பதால், பரமக்குடியில் தலைவர் பதவிக்கு வாய்ப்பளித்தால், முதன்மை நகராட்சியாக மாற்றுவேன். எமனேஸ்வரம் பகுதி மக்கள் மற்றும் நெசவாளர்களின் குறையை தீர்க்க அல்லுக்கூடம் அமைப்பேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கூட்டுறவு சங்க தள்ளுபடி பாக்கி தொகை பெற்றுத்தருவேன். பாதாளசாக்கடை, வைகை கரை ஓரத்தில் புறவழிச்சாலை, பஸ் ஸ்டாண்ட் நவீனப்படுத்துதல், மீன் மார்க்கெட்டில் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசின் பார்வைக்குச் சென்றுள்ளன. நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த எனக்கு ஓட்டு போடுங்கள், என்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முதுகுளத்தூர் முருகன், பரமக்குடி எம்.எல்.ஏ., டாக்டர் சுந்தரராஜ், நகர்செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் முனியசாமி உடன் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us