வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று பிரசாரம்
வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று பிரசாரம்
வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் இன்று பிரசாரம்
ADDED : செப் 27, 2011 11:41 PM
சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆரணி, வேலூர், ஆற்காடு, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில், அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்கிறார். இதைதொடர்ந்து, நாளை மூங்கில்துரைப்பட்டு, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களிலும், 30ம் தேதி மயிலாடுதுறை, தரங்கம்பாடி, நாகை, திருவாரூர், மன்னார்குடி ஆகிய இடங்களிலும், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு புதிய வேட்பாளராக, சித்ரா ராஜேசும், ஏற்கனவே உதகை மண்டல நகராட்சித் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டவருக்குப் பதில், கவிதா புதிதாக அறிவிக்கப்படுகிறார் என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


