மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு டிச., 3 விடுமுறை
மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு டிச., 3 விடுமுறை
மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு டிச., 3 விடுமுறை
ADDED : ஜூலை 23, 2011 12:00 AM
சென்னை : ஆண்டுதோறும் டிச., 3 ல் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இச்சலுகை, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கொண்டாட வசதியாக, ஆண்டுதோறும் டிச., 3 ல், ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


