/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சுரண்டை பள்ளியில் குருபூர்ணிமா விழாசுரண்டை பள்ளியில் குருபூர்ணிமா விழா
சுரண்டை பள்ளியில் குருபூர்ணிமா விழா
சுரண்டை பள்ளியில் குருபூர்ணிமா விழா
சுரண்டை பள்ளியில் குருபூர்ணிமா விழா
ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
சுரண்டை : சுரண்டை ஜெயந்திரா மெட்ரிக் பள்ளியில் குருபூர்ணிமா விழா நடந்தது.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் சார்பில் குருபூர்ணிமா விழா சுரண்டை ஜெயந்திரா மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
விழாவிற்கு பள்ளி முதல்வர் ஞானமணி தலைமை வகித்தார். ஆசிரியர் ராமராஜ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் கருப்பசாமி அறிமுக உரையாற்றி, விழாவின் நோக்கம் குறித்து பேசினார். விவேகானந்த கேந்திர சிறப்பு விருந்தினர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கேந்திர சமய வகுப்பு அமைப்பாளர் கண்ணன் நிறைவுரையாற்றினார்.விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், விவேகானந்த கேந்திர அன்பர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக குருவை போற்றும் வண்ணம் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை வணங்கி மரியாதை செய்தனர். ஆசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கேந்திர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செய்திருந்தனர்.