Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காலண்டர்களில் பீடி படம் தடை கோரி பொது நல மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

காலண்டர்களில் பீடி படம் தடை கோரி பொது நல மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

காலண்டர்களில் பீடி படம் தடை கோரி பொது நல மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

காலண்டர்களில் பீடி படம் தடை கோரி பொது நல மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

ADDED : செப் 07, 2011 11:18 PM


Google News
மதுரை: சிவகாசி அச்சகங்களில் 2012 காலண்டர்களில் பீடி மற்றும் புகையிலை பொருட்கள் படத்தை அச்சிட தடை கோரும் மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சிவகாசியை சேர்ந்த குமாரவேல் தாக்கல் செய்த பொது நல மனு: சிவகாசி அச்சகங்களில் புத்தாண்டை முன்னிட்டு, காலண்டர்கள், லெட்டர்பேடுகள் அச்சிட ஆர்டர் கொடுக்கப்படுகின்றன. காலண்டர், லெட்டர்பேடுகளில் பீடி, புகையிலை பொருட்கள் படங்கள் அச்சிடப்படுகின்றன. ஏற்கனவே இவற்றை அச்சிட சுப்ரீம் கோர்ட் தடையுள்ளது. இருப்பினும் அதையும் மீறி, அவை அச்சிடப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச், மனுதாரர் மனுவை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கலெக்டருக்கு உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us