/உள்ளூர் செய்திகள்/தேனி/ஊராட்சி உறுப்பினர் வேட்புமனுக்கள் தட்டுப்பாடு : வேட்பாளர்கள் தவிப்புஊராட்சி உறுப்பினர் வேட்புமனுக்கள் தட்டுப்பாடு : வேட்பாளர்கள் தவிப்பு
ஊராட்சி உறுப்பினர் வேட்புமனுக்கள் தட்டுப்பாடு : வேட்பாளர்கள் தவிப்பு
ஊராட்சி உறுப்பினர் வேட்புமனுக்கள் தட்டுப்பாடு : வேட்பாளர்கள் தவிப்பு
ஊராட்சி உறுப்பினர் வேட்புமனுக்கள் தட்டுப்பாடு : வேட்பாளர்கள் தவிப்பு
ADDED : செப் 24, 2011 10:10 PM
போடி : கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்கள் தட்டுபாடு ஏற்பட்டதால் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியாமல் வேட்பாளர்கள் தவிப்படைந்துள்ளனர்.
போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மாவட்ட பஞ்., உறுப்பினர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதே போல கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தட்டுப்பாடு: கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை உறுப்பினருக்கான வேட்பு மனுக்கள் குறைந்தளவு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராம பொதுமக்கள் வேட்பு மனு பெற முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். வேட்பு மனு வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தால் மட்டுமே வேட்பு மனுவை ஜெராக்ஸ் எடுத்து கொள்ளுமாறு உதவி தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். விண்ணப்பம் ஒரு ரூபாய் மட்டுமே. ஆனால் ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென்றால் 10 ரூபாய் வரை செலவாகிறது. இந்நிலையில் ஜெராக்ஸ் எடுக்க கூட முடியாமல் பல கிராம ஊராட்சி, மலைக்கிராமங்கள் உள்ளன. இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாமல் இவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அதிகாரி சண்முக சுந்தரம் கூறுகையில்: தட்டுபாடு இல்லாத நிலையில் வேட்பு மனுக்கள் வழங்கப்படும்,' என்றார்.


