தேனியில் தடையின்றி மான் வேட்டை : ஆழ்ந்த தூக்கத்தில் வனத்துறை
தேனியில் தடையின்றி மான் வேட்டை : ஆழ்ந்த தூக்கத்தில் வனத்துறை
தேனியில் தடையின்றி மான் வேட்டை : ஆழ்ந்த தூக்கத்தில் வனத்துறை

வருஷநாடு : தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதிகளில் மான் வேட்டை தடையின்றி நடந்து வருகிறது.
குமணந்தொழு, கோரையூத்து, காந்திகிராமம், வாலிப்பாறை, காமாட்சிபுரம், மேல்பூசனூத்து, கீழ் பூசனூத்து பகுதிகளில் துப்பாக்கிகள் மூலமும், கோரையூத்து, மண்ணூத்து, அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் நாய்களை வைத்தும் மான்கள் வேட்டையாடப்படுகின்றன. வேட்டையாடப்படும் மான்களின்,கால் எலும்புகள், தோல் ஆகியவை வேட்டையாடிய இடத்திலேயே விடப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய வனத்துறை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த தூக்கத்தில் காணப்படுகிறது.
மான் வேட்டை குறித்து, மாவட்ட வன அலுவலரை தொடர்பு கொள்ள முடியாததால், கலெக்டர் பழனிசாமியிடம், கேட்ட போது, ' மான் வேட்டையாடுவது உண்மையாக இருந்தால், வேட்டைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டையை தடுக்க சிறப்பு தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்' என்றார்.


