வீதியை ஆக்கிரமித்து கான்கிரீட் வீடு தி.மு.க., பிரமுகரிடம் விசாரணை
வீதியை ஆக்கிரமித்து கான்கிரீட் வீடு தி.மு.க., பிரமுகரிடம் விசாரணை
வீதியை ஆக்கிரமித்து கான்கிரீட் வீடு தி.மு.க., பிரமுகரிடம் விசாரணை
ADDED : ஆக 13, 2011 01:34 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே, வீதியை ஆக்கிரமித்து தி.மு.க., பிரமுகர் வீடு கட்டியதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி; தி.மு.க., பிரமுகர். இவர், திரவுபதியம்மன் கோவிலுக்குப் பின்புறம் தெருவை ஆக்கிரமித்து, கலைஞர் இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த வீட்டை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் சார்பில் கடந்த 10ம் தேதி, திண்டிவனம் தாசில்தார் தலைமலையிடம் புகார் மனு அளித்தனர்.
தாசில்தார் உத்தரவின்படி, பிரம்மதேசம் வருவாய் ஆய்வாளர் ஜானகிராமன், விட்டலாபுரம் வி.ஏ.ஓ., பாலசுந்தரம் ஆகியோர், நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். வீட்டு உரிமையாளர் குப்புசாமியிடம் விசாரணை நடத்திய போது, வருவாய் ஆய்வாளருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து திண்டிவனம் தாசில்தார் தலைமலை கூறுகையில்,'விட்டாலபுரம் கிராமத்தில் வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்ததில், வீதியை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரிந்துள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு அறிக்கை அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


