/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மைக்கில் பேசும் போது செல்போன் வந்தால் இரையும்இதுபோன்ற இடையூறை களைய கண்டுபிடிப்பு மிக அவசியம்மைக்கில் பேசும் போது செல்போன் வந்தால் இரையும்இதுபோன்ற இடையூறை களைய கண்டுபிடிப்பு மிக அவசியம்
மைக்கில் பேசும் போது செல்போன் வந்தால் இரையும்இதுபோன்ற இடையூறை களைய கண்டுபிடிப்பு மிக அவசியம்
மைக்கில் பேசும் போது செல்போன் வந்தால் இரையும்இதுபோன்ற இடையூறை களைய கண்டுபிடிப்பு மிக அவசியம்
மைக்கில் பேசும் போது செல்போன் வந்தால் இரையும்இதுபோன்ற இடையூறை களைய கண்டுபிடிப்பு மிக அவசியம்
ADDED : அக் 13, 2011 05:38 AM
தூத்துக்குடி:மைக்கில் பேசும் போது செல்போன் வந்தால் ஒருவித இரைச்சல்
வரும். அவை வராமல் தடுக்க என்ன செய்யலாம் உள்ளிட்ட புதிய, புதிய
கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று தூத்துக்குடியில்
நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில் கலெக்டர் ஆஷீஷ்குமார்
தெரிவித்தார்.மாணவ, மாணவிகள் இடையே இளம் பிராயத்திலே அறிவியல் ஆர்வத்தை
தூண்டும் வகையில் சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில்
நடுநிலைப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவ, மாணவிகளை தேர்வு
செய்யப்பட்டனர்.அவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி அதன் மூலம் அவர்கள்
உபகரணங்கள் வாங்கி அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி கண்காட்சி நடத்த
மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. மத்திய அரசின் அறிவியல்
தொழில் நுட்ப துறையின் நிதியுதவியுடன் இந்தியா முழுவதும் இன்ஸ்பேர் திட்டம்
செய ல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 692 மாணவ,
மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் மூலம் உபகரணங்கள் பெற்று
தங்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்கி மா ணவ, மாணவிகளின் அறிவியல்
புத்தாக்க கண்காட்சி நேற் று தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியல் நடந்தது. கண்காட்சியை மாவ ட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார்
திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா
வரவேற்றார்.அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குநர் வள்ளி பேசுகையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாநில போட்டிக்கு 5 சதவீத மாணவர்கள்
தேர்வு செய்யப்படுவர். சுமார் 35 மாணவர்கள் இம் மாவட்டத்தில் இருந்து மாநில
போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்து
செல்லப்படுவர்.
மாநில போட்டியில் வெற்றி பெறுவோர் தேசிய போட்டிக்கு செல்ல
முடியும். தேசிய போட்டிக்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் செல்ல
வேண்டும். தேசிய போட்டிக்கு தேர்வு செய்யும் கண்காட்சி படைப்புகள்
பெரும்பாலும் பாடங்களில் உள்ள அறிவியல் படைப்புகளை மையமாக வைத்து மாணவ,
மாணவிகள் உருவாக்கும் அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு தான் பரிசு
கிடைக்கிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை இதுபோன்ற அறிவியல்
கண்டுபிடிப்புகள் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றார்.கலெக்டர் ஆஷீஷ்குமார்
பேசியதாவது;மத்தி, மாநில அரசு அறிவியல் மாணவர்கø ள உருவாக்க உருவாக்கியுள்ள
இந்த திட்டம் சிறப்பான திட்டமாகும். இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்க
வேண்டும். மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகளுக்கு
பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும். எஸ்.ஆர்.எம்
பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்டேட்லைட் உருவாக்கி விண்ணில் ஏவ உள்ளனர். இது
வரவேற்க கூடிய ஒன்று. இதுபோன்று மாணவர்கள் ஏதாவது கண்டுபிடிப்புகளை
உருவாக்க வேண்டும் என்று நினைத்து அதனை செய்து காட்ட வேண்டும்.தற்போது
மைக்கில் பேசிக் கொ ண்டிருக்கும் போது செல்போ ன் வந்தால் ஒரு வித இø ரச்சல்
வரும். இதன் மூலம் இடையூறு இருக்கும். இந்த இடையூறை களைய என்ன செய்யலாம்
என்று கண்டுபிடிக்கலாம். அதே போல் ரேடியோ பாடிக் கொண்டிருக்கும் போது பேன்
போட்டால் ஒரு வித இரைச்சல் வரும். அதனை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை
கண்டுபிடிக்கலாம். இதே போல் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை மாணவர்கள்
கண்டுபிடிக்க இதுபோன்ற வாய்ப்பினை பய ன்படுத்த வேண்டும்.இவ்வாறு கலெக்டர்
பேசினார்.பி.எம்.சி பள்ளி ஆசிரியர் கென்னடி, கோ வில்பட்டி கல்வி மாவட்ட
அதிகாரி ராஜலட்சுமி, சி.இ.ஓ நேர்முக உதவியாளர்கள் குமாரதாஸ், ரத்தினம்,
ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட அதிகாரி குமாரசாமி, ஸ்டீபன் செல்வக்குமார்,
சொக்கலிங்கம், உமரிக்காடு அரசு பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.


