வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும்கூலித்தொழிலாளர்கள் ஏலம் விடப்படுகின்றனர்
வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும்கூலித்தொழிலாளர்கள் ஏலம் விடப்படுகின்றனர்
வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும்கூலித்தொழிலாளர்கள் ஏலம் விடப்படுகின்றனர்
தொடுபுழா:பல்வேறு பணிகளுக்காக மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு அழைத்து வரப்படும் கூலித் தொழிலாளர்கள், ஏலம் முறையில் பெறப்படுகின்றனர்.
இவர்களை தவிர, தமிழகம், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள், ஏலம் முறையில் பெறப்படுகின்றனர். அவர்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யும்போது, பேசப்படும் தொகையில் மிக குறைந்தளவே அத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களை கேரளாவுக்கு அழைத்து வரும் இடைத்தரகர்கள் பெரும் பகுதி தொகையை தொழிலாளர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஏப்பம் விட்டு விடுகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, கேரள மாநிலத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்கள், இங்கு அவர்கள் வசிக்குமிடம், அவர்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை, மாநில போலீசார் விதித்துள்ளனர்.ஆனால், அவை எல்லாம் காற்றில் பறந்து கரைந்து விட்டன. இதை எந்த இடைத்தரகரோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ கடைபிடிக்கவில்லை. இதனால், மாநிலத்தில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இத்தொழிலாளர்கள் அடைக்கலம் கொடுத்தோ, வேறு வழிகளிலோ காப்பாற்றி வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மாநிலத்தில் நடந்துள்ள பலாத்காரம், இளம்பெண் கடத்தல், கொள்ளை போன்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இத்தொழிலாளர்கள் பலரின் ஒத்துழைப்பு, குற்றவாளிகளுக்கு கிடைத்துள்ள ரகசிய தகவலும் போலீசார் வசம் கிடைத்துள்ளது. இதுபோன்று நடக்காமல் இருக்கத்தான் போலீசார் ஒவ்வொரு வெளி மாநில தொழிலாளி குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய கோரி வருகின்றனர்.மேலும், இதுவரை இல்லாத நோய்களை மாநிலத்திற்குள் கொண்டு வருபவர்களாகவும், இத்தொழிலாளர்களில் சிலர் இருக்கின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


