/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சில்வர் ஓக் மரம்: பர்மிட் வழங்க பேரம்?சில்வர் ஓக் மரம்: பர்மிட் வழங்க பேரம்?
சில்வர் ஓக் மரம்: பர்மிட் வழங்க பேரம்?
சில்வர் ஓக் மரம்: பர்மிட் வழங்க பேரம்?
சில்வர் ஓக் மரம்: பர்மிட் வழங்க பேரம்?
ADDED : ஆக 11, 2011 10:57 PM
கோத்தகிரி : நீலகிரி மாவட்ட மர வியாபாரிகளுக்கு ரத்து செய்யப்பட்ட 'பர்மிட்' வழங்குவதற்காக, அரசியல் கட்சியினர் பேரம் நடத்துவதாக சிறு விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். தங்களது தேயிலை தோட்டத்தில் நிழலுக்காகவும், விறகுக்காகவும் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்களை நட்டு, பராமரித்து வருகின்றனர். நடவு செய்த மரங்கள் அதிகபட்சமாக 10 முதல் 15 ஆண்டுகளில் முதிர்ந்து விடுவதால், வனத்துறையின் அனுமதிக்கு பின் மரங்களை விற்று, பொருளாதார தட்டுப்பாட்டை சமாளித்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி இயற்கை வளத்தை பாதுகாக்கவும், மரக்கொள்ளையை தடுத்து நிறுத்தவும் கடந்த சில நாட்களுக்கு முன், சில்வர் ஓக் மரங்கள் வெட்டுவதற்கான 'பர்மிட்'டை அரசு ரத்து செய்துள்ளது. 'ரத்து செய்யப்பட்ட பர்மிட் மீண்டும் பெற்றுத்தரவேண்டும்' என, முக்கிய அரசியல் புள்ளிகளிடம் சில மரவியாபாரிகள் பேரம் நடத்தி வருகின்றனர்' என, சிறு விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,''விவசாய நிலத்திற்கு உண்டான ஆவணங்களை வருவாய் துறையிடம் சமர்ப்பித்தால் மட்டுமே குறிப்பிட்ட பகுதியில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட கமிட்டி சார்பில் பர்மிட் வழங்கப்பகிறது. இந்த பர்மிட்டுகளில் சில குளறுபடிகளை செய்து, சில்வர் ஓக் மரம் மட்டுமல்லாமல், பல பட்டியல் வகை மரங்களையும் வெட்டி இரவோடு, இரவாக உள்ளூர் மற்றும் வெளியூர் மரமில்களில் விற்று, சில வியாபாரிகள் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர். இந்த குற்றங்களை கண்டுக்கொள்ளாமல் இருக்க, வனத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு 'கவனிப்பு' அளிக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. 'விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு, சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்படும் பர்மிட்டை, அந்தந்த நில உரிமையாளர்களுக்கு நேரடியாக வழங்கினால் மட்டுமே, மாவட்டத்தில் நடக்கும் மர கொள்ளையை தடுக்க முடியும். மேலும், கட்சியினர் நடத்தும் 'பேரம்' மூலம், அரசுக்கு ஏற்படும் அவபெயரை தவிர்க்க வழி கிடைக்கும்' என்றார்.


