ADDED : ஜூலை 27, 2011 11:08 PM
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த எழுத்தூரில் மங்களூர் ஒன்றியம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுகாதார பயிற்சி முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
ஊராட்சி எழுத்தர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். ஊக்குனர் செல்வி வரவேற்றார்.முகாமில் 17 சுய உதவி குழுக்கள் பங்கேற்றன. சுற்றுப்புற சுகாதாரம், அயோடின் உப்பு பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பயிற்சியளித்தார். மேலும், வங்கிக்கடன் மூலம் கழிவறை கட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.