/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிக்கன் குழம்பு அண்டா கவிழ்ந்தது :மாணவர்கள் காயம்சிக்கன் குழம்பு அண்டா கவிழ்ந்தது :மாணவர்கள் காயம்
சிக்கன் குழம்பு அண்டா கவிழ்ந்தது :மாணவர்கள் காயம்
சிக்கன் குழம்பு அண்டா கவிழ்ந்தது :மாணவர்கள் காயம்
சிக்கன் குழம்பு அண்டா கவிழ்ந்தது :மாணவர்கள் காயம்
ADDED : ஜூலை 28, 2011 10:05 PM
கோவை : சூடான சிக்கன் குழம்பு வைக்கப்பட்டிருந்த அண்டா தவறி விழுந்து, அரசு
அம்பேத்கர் ஆதி திராவிடர் விடுதி மாணவர்கள் காயம் அடைந்தனர். கோவை அரசு
அம்பேத்கர் ஆதி திராவிடர் கல்லூரி விடுதியில் வாரம் ஒரு முறை, மதிய உணவுடன்
சிக்கன் குழம்பு பறிமாறப்படுகிறது. நேற்று காலை தயாரான சிக்கன் குழம்பு,
மெஸ் ஹாலில் சுடச்சுட ஒரு அண்டாவில் வைக்கப்பட்டிருந்தது. மதிய உணவு
நேரத்துக்கு முன்னதாகவே மெஸ் ஹாலுக்கு சென்ற சில மாணவர்கள், சிக்கன்
குழம்பு சாப்பாட்டை ருசிக்க போட்டி போட்டனர். இதில் அவர்களுக்குள் லேசான
'தள்ளு முள்ளு' ஏற்பட்டதில், சிக்கன் குழம்பு வைக்கப்பட்டிருந்த அண்டா,
தவறி மாணவர்கள் மீது கவிழ்ந்தது. இதில், ஒன்பது மாணவர்கள் காயம் அடைந்தனர்.
ஒரு மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்கள் கோவை அரசு
மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த கலெக்டர் கருணாகரன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
மாணவர்களை சென்று பார்த்து ஆறுதல் கூறினார். சம்பவம் நடந்த விதம் குறித்து,
பிற மாணவர்களிடம் கேட்டறிந்தார். சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த
மாணவர்களை, சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க மருத்துவமனை
கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கண்காணிப்பாளர் மதிவாணன், இருப்பிட மருத்துவர் சிவப்பிரகாசம் உடனிருந்தனர்.


