/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/"இரட்டை இலை'யை இழந்த அ.தி.மு.க., வேட்பாளர்"இரட்டை இலை'யை இழந்த அ.தி.மு.க., வேட்பாளர்
"இரட்டை இலை'யை இழந்த அ.தி.மு.க., வேட்பாளர்
"இரட்டை இலை'யை இழந்த அ.தி.மு.க., வேட்பாளர்
"இரட்டை இலை'யை இழந்த அ.தி.மு.க., வேட்பாளர்
ADDED : அக் 07, 2011 12:44 AM
ஊட்டி : ஊட்டி நகராட்சி 23ம் வார்டில் போட்டியிடும் சாகுல் ஹமீது என்பவர் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டும், அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல், 'வைரம்' சின்னம் கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி 23ம் வார்டில் அ.தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய சுரேஷ், சாகுல் ஹமீது ஆகிய இருவருக்கும் பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. இருவரும் கட்சி கடிதம் பெற்றிருந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால், இருவரும் சுயேச்சைகளாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், சாகுல் ஹமீது அ.தி.மு.க., வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கடிதம் அளிக்கப்பட்டது. எனினும், காலம் கடந்து விட்டதால், அவருக்கு இரட்டைஇலை சின்னம் வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால்,'வைரம்' சின்னம் வழங்கப்பட்டது. 'கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத' நிலையில், தனது வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார், சாகுல் ஹமீது.


