/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/மர அறுவை மில்லில் மர்ம தீ: மரங்கள் நாசம்மர அறுவை மில்லில் மர்ம தீ: மரங்கள் நாசம்
மர அறுவை மில்லில் மர்ம தீ: மரங்கள் நாசம்
மர அறுவை மில்லில் மர்ம தீ: மரங்கள் நாசம்
மர அறுவை மில்லில் மர்ம தீ: மரங்கள் நாசம்
ADDED : ஆக 27, 2011 11:40 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மர அறுவை மில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்ததில் 10 லட்ச ரூபாய் பெறுமதியான மரக்கட்டைகள் தீயில் கருகி சேதமடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ஜெயமோகன். இவருக்கு சொந்தமான மர அறுவை மில் கட்டுமாவடி சாலையில் உள்ளது. இங்கு பலலட்ச ரூபாய் பெறுமதியான மரங்கள் மற்றும் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில் இந்த மில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த அறந்தாங்கி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டுமணி நேரம்வரை போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருந்தும் 10 லட்ச ரூபாய் பெறுமதியான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தது. தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரிக்கின்றனர்.


