/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்புபுதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு
புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு
புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு
புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு
ADDED : ஜூலை 23, 2011 11:43 PM
கடலூர் : புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடலூரில், பாலசுப்ர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பணியாளர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த மத்திய, பெரும்பாலான மாநில அரசுகள் முடிவு செய்தன.
இத்திட்டத்தை 1.1.2004ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு 1.4.2003ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை வரும் 1ம் தேதி பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இரண்டு கோடி பணியாளர்களின் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் மசோதாவை நிறைவேற்றுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பாலசுப் ரமணியன் கூறினார்.