/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மின் கம்பியில் சிக்கி பெண் மயில் பலிமின் கம்பியில் சிக்கி பெண் மயில் பலி
மின் கம்பியில் சிக்கி பெண் மயில் பலி
மின் கம்பியில் சிக்கி பெண் மயில் பலி
மின் கம்பியில் சிக்கி பெண் மயில் பலி
ADDED : ஆக 20, 2011 11:50 PM
திருப்பூர்:திருப்பூரில் மின்கம்பியில் சிக்கிய பெண்மயில், மின்சாரம்
தாக்கியதில் உயிரிழந்தது.திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு, குமாரசாமி காலனி
பிரதான ரோடு, புஷ்பாநகர் பகுதிகளில் நேற்று மாலை 6.00 மணியளவில் மின்தடை
ஏற்பட்டது.
இருள் சூழ்ந்த நிலையில், அவ்வழியே பறந்து வந்த பெண் மயில்
ஒன்று, அவ்வழியே சென்ற மின்கம்பியில் சிக்கியது; 6.45 மணியளவில் மீண்டும்
மின்சாரம் வந்தபோது, கம்பியில் சிக்கிய பெண்மயிலை, மின்சாரம் தாக்கியது;
அப்பகுதியில் இருந்த குமாரசாமி என்பவருக்கு சொந்தமான கடை அருகில் விழுந்து
உயிரிழந்தது. தகவல் அறிந்து அங்குவந்த தெற்கு போலீசார், இறந்த மயிலின் உடலை
எடுத்து சென்றனர்.


