/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கம்ப்யூட்டரை போலீசாரே கையாள்வதால் தொடரும் சிக்கல் :சட்டம் ஒழுங்கு பாதிப்புகம்ப்யூட்டரை போலீசாரே கையாள்வதால் தொடரும் சிக்கல் :சட்டம் ஒழுங்கு பாதிப்பு
கம்ப்யூட்டரை போலீசாரே கையாள்வதால் தொடரும் சிக்கல் :சட்டம் ஒழுங்கு பாதிப்பு
கம்ப்யூட்டரை போலீசாரே கையாள்வதால் தொடரும் சிக்கல் :சட்டம் ஒழுங்கு பாதிப்பு
கம்ப்யூட்டரை போலீசாரே கையாள்வதால் தொடரும் சிக்கல் :சட்டம் ஒழுங்கு பாதிப்பு
ADDED : ஆக 26, 2011 11:13 PM
விருதுநகர் : போலீஸ் துறையை நவீன படுத்த, ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் வழங்கப்படும் கம்ப்யூட்டர்களை , போலீசாரே கையாள வேண்டி உள்ளதால், போலீஸ் பற்றாக்குறையால் , சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது.போலீஸ் துறையை நவீன படுத்தும் நோக்கில், 1,575 ஸ்டேஷன்களுக்கு தலா நான்கு கம்ப்யூட்டர் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
கம்ப்யூட்டர் பயன்பாடு தெரிந்த போலீசார் குறைவாக உள்ளதால், போலீசாருக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற போலீசார், அந்தந்த ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணி மற்றும் சட்டம் ஒழுங்கு பணியையும் பார்த்து கொள்ள வேண்டும். ஏற்கனவே, போலீசார் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இப்பணியை சேர்த்து கவனிப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புகார்கள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்பு ள்ளது. இதனால், ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தனி கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர். இவரால், பழுது நேரங்களில் கூட சரி செய்யமுடியும். மேலும் இவரிடமே, போலீசாரும் ஓய்வு நேரங்களில் எளிமையாக கற்று கொள்ள முடியும். இதன் மூலம் அரசு திட்டமும் தடையின்றி செயல்படும்.அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் போலீசார் எளிமையாக கையாள முடியும்


