/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கைதென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை
தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை
தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை
தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட கோரிக்கை
தென்காசி: 'தென்காசி ரயில்வே ரோட்டில் நவீன கழிப்பிடம் கட்ட வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அவர்கள் நகராட்சி சுவரை இடித்து விட்டு தனியார் கட்டடத்திற்கு வாயில் அமைக்க கூடாது. இப்பகுதியில் நவீன கழிப்பிடம் கட்ட ஏற்கனவே எம்.எல்.ஏ., உறுதியளித்து அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே விரைவில் நவீன கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.முற்றுகையிட்ட தைக்கா தெருவை சேர்ந்த பொதுமக்களிடம் போலீசார் மற்றும் நகர அ.தி.மு.க.செயலாளர் முத்துக்குமார் சமாதானமாக பேசியதை அடுத்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முற்றுகையில் முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, மாரியப்பன், கணபதி, ராஜீ, சுரேஷ், சுப்பிரமணியன், கணேசன், மகேந்திரன், சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


