/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஊத்துமலை அருகே பள்ளி குழந்தைகள் கடத்தல்? பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்புஊத்துமலை அருகே பள்ளி குழந்தைகள் கடத்தல்? பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
ஊத்துமலை அருகே பள்ளி குழந்தைகள் கடத்தல்? பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
ஊத்துமலை அருகே பள்ளி குழந்தைகள் கடத்தல்? பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
ஊத்துமலை அருகே பள்ளி குழந்தைகள் கடத்தல்? பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு
ADDED : செப் 10, 2011 04:14 AM
வீரகேரளம்புதூர் : ஊத்துமலை அருகே பள்ளி குழந்தைகள் கடத்தப்பட்டதாக பரவிய
தகவலை தொடர்ந்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துமலை அருகேயுள்ள கிராமம் கங்கணங்கிணறு.
இங்குள்ள நடுநிலைப்பள்ளி
ஒன்றில் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
நேற்று காலை இப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மேலக்கங்கணங்கிணறு கிராமத்தை
சேர்ந்த அன்புராஜ் மகள் கவிதா (9), ராமசாமி மகள் திருமேனி (9),
ராமகிருஷ்ணன் மகன் பாலகிருஷ்ணன் (9), இளையபெருமாள் மகன் இளையமுத்து (11),
ராமகிருஷ்ணன் மகன் முத்துராஜ் (11), தாமஸ் மகன் மகாராஜன் (9), ராதா (9)
ஆகியோரை சிலர் வேனில் கடத்திச் சென்றதாகவும், குழந்தைகள் கதறியதால் அவர்களை
விட்டு விட்டு சென்று விட்டதாகவும், கடந்த சில நாட்களாக இப்பகுதியில்
தொடர்ந்து குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் என்ற தகவல் காட்டுத்தீ போல
பரவியது. இதனால் பொதுமக்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன்,
இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், கோவிந்தன், பெலிக்ஸ், வீ.கே.புதூர் தாசில்தார்
சுமங்கலி, உதவி தொடக்க கல்வி அலுவலர் வனிதா தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடத்தலுக்கு
பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட வேன் ஊத்துமலையை சேர்ந்தது எனவும்,
தனியார் காற்றாலை அமைக்கும் கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை
ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகவும், கீழக்கலங்கலை சேர்ந்த வேன் டிரைவர்
வழக்கமாக வழியில் நடந்து செல்லும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்று
பள்ளிக்கு அருகில் இறக்கி விட்டு செல்வதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
எனினும் தங்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர் என்றும், முன்னுக்குபின்
முரணாகவும் குழந்தைகள் கூறியதை தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி
வருகின்றனர். பதட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


