Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ADDED : ஜூலை 28, 2011 02:03 AM


Google News

தர்மபுரி: தர்மபுரி உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அன்பு ஆடவர் முதியோர் இல்லத்தில் நடந்தது.

தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரா ஆதிமூலம் வரவேற்றார். இலக்கியம்பட்டி இந்தியன் வங்கி கிளை மேலாளர் பாமா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பெரியாம்பட்டியை சேர்ந்த சீனிவாசனை, இணை செயலாளர் அமர்நாத்சிங் பாராட்டினார். எஸ்.ஐ., செங்குட்டுவன், சரவணன், ஜெய்கிருஷ்ணன், பாரதி ஆகியோர் பேசினர். லட்சுமி காலனி செல்வம் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார். தர்மபுரி குமாரசாமிபேட்டை சரவணன், 10,000 ரூபாய் அன்பு ஆடவர் முதியோர் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினார். தர்மபுரி மூர்த்தி, மாலதி தம்பதியர் 1,000 மதிப்பு ஆரியத்தை நாகர்கூடல் புவிதம் கல்வி மைய மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து 12வது மாதமாக வழங்கினார். கனரா வங்கி அலுவலர் ஹரிஅம்மாள் கிருஷ்ணன், கல்வி உதவித்தொகையாக 1,000 ரூபாயும், தொடர்ந்து 46வது மாதமாக செல்வம் கல்வி உதவித்தொகை 1,000 ரூபாயும், குமாரசாமிபேட்டை மணி, ஜானகி தம்பதியர் அன்பு ஆடவர் முதியோர் இல்லத்துக்கு 'டிவி'யும், உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் ஆன்மிக தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆதரவற்றோர் முதியோருக்கு பகல் நேர காப்பகத்துக்கு மதிய உணவுக்கு 2,000 ரூபாயும் நன்கொடை வழங்கினர். சுபா மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் பெருமாள், மருத்துவ உதவியாக 1,000 ரூபாயும், ஓசூர் தேவராஜன், அன்பு ஆடவர் இல்லத்துக்கு கடிகாரமும், சென்னை எண்ணங்களில் சங்கமம் பிரபாகர், ஏ.செக்காரப்பட்டி டியூஷன் சென்டருக்கு கம்ப்யூட்டரும், இன்னர்வீல் சங்க தலைவி செல்வமணி செல்வராஜ் அன்பு ஆடவர் முதியோர் இல்லத்துக்கு மின் விசிறியும் வழங்கினர். கேத்துரெட்டிப்பட்டி தர்மராஜன் கல்வி உதவித்தொகை 1,000 ரூபாயும், கல்வி உதவித்தொகையாக எஸ்.ஐ., செங்குட்டுவன் 1,000, பேராசிரியர் சரவணன் 2,000 ரூபாய், ஜெய்கிருஷ்ணன் 2,000 ரூபாய் உள்ளிட்ட 5,000 ரூபாய் மதிப்பில் நாகர்கூடல் புவிதம் கல்வி மையத்துக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. சரஸ்வதி சந்திரமௌலி மருத்துவ உதவித்தொகையாக 5,00 ரூபாய் வழங்கினர். நன்கொடை வழங்கியவர்களை சங்க தலைவர் மாணிக்கம் பாராட்டி, கவுரவித்தார். பயனாளிகளுக்கு வட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன் விருந்து வழங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் மணி உணவு ஏற்பாடுகளை செய்திருந்தார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். உதவும் உள்ளங்கள் சார்பில் மாதம் தோறும் ஏழைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கொடை உள்ளம் கொண்டவர்கள் இந்த பணியில் தங்களையும் இணைத்து தங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு வழங்கிட முன் வரலாம். உதவிகள் வழங்க விரும்புவோர் உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் 94428 24264 மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் 94432 60141 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us