உல்லாசத்திற்கு கள்ளக்காதலி மறுப்பு:கட்டிலை கிணற்றில் வீசிய கள்ளக் காதலன்
உல்லாசத்திற்கு கள்ளக்காதலி மறுப்பு:கட்டிலை கிணற்றில் வீசிய கள்ளக் காதலன்
உல்லாசத்திற்கு கள்ளக்காதலி மறுப்பு:கட்டிலை கிணற்றில் வீசிய கள்ளக் காதலன்
ADDED : ஆக 27, 2011 11:51 PM
திருக்கோவிலூர்:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக் காதலியின் கட்டில், படுக்கை விரிப்பை, கள்ளக் காதலன் கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த, ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர், நேற்று காலை 9 மணிக்கு, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அவரது கிணற்றில், கயிற்றுக் கட்டில், பாய், தலையணை, பெட்ஷீட் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சந்தேகத்தின் பேரில், வி.ஏ.ஓ., குருமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார்.
அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கிணற்றில் பிரேதம் உள்ளதா என பார்த்தனர். பிரேதம் இல்லாததால், மேலும் விசாரணை நடத்தினர்.இதில், அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அருகிலுள்ள குயவன் காடுவெட்டியில் இருக்கும், தன் கள்ளக் காதலியிடம் உல்லாசமாக இருக்க, நேற்று முன்தினம் இரவு சென்றார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து, அவர் படுத்திருந்த கட்டில், பாய், தலையணை, பெட்ஷீட்டை தூக்கி வந்து, கிணற்றில் போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலைச் சம்பவமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் சென்ற போலீசார், நிம்மதியடைந்தாலும், இச் சம்பவம் ஆற்காடு மட்டுமின்றி, சுற்று வட்டார கிராம மக்களை சிரிப்பில் ஆழ்த்தியது.


