/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு குழித்துறை கோர்ட்டில் மாஜி அமைச்சர் ஆஜர்முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு குழித்துறை கோர்ட்டில் மாஜி அமைச்சர் ஆஜர்
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு குழித்துறை கோர்ட்டில் மாஜி அமைச்சர் ஆஜர்
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு குழித்துறை கோர்ட்டில் மாஜி அமைச்சர் ஆஜர்
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு குழித்துறை கோர்ட்டில் மாஜி அமைச்சர் ஆஜர்
ADDED : செப் 13, 2011 12:13 AM
மார்த்தாண்டம் : களியக்காவிளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் குழித்துறை கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
களியக்காவிளை ஜங்ஷனில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் வாகை முத்தழகன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அ.தி.மு.க., வினர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், பேச்சாளர் வாகை முத்தழகன், களியக்காவிளை பேரூர் செயலாளர் ஜெயசந்திரன், ஒன்றிய பொருளாளர் மாகின் அபுபக்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று குழித்துறை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மாரியப்பன் முன்னிலையில் ஆஜரானார். கோர்ட் வளாகத்தில் குழித்துறை நகர தி.மு.க., செயலாளர் ஆசைதம்பி, மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிசந்திரன், வக்கீல் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூடியிருந்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியதாவது: களியக்காவிளை பொதுக்கூட்டத்தில் நான் பேசிவிட்டு சென்றுவிட்டேன். சம்பவம் நடக்கும் போது நான் இல்லை. இது தொடர்பான சி.டி., ஆதாரமும் உள்ளது. ஆனால் பொய்யான வழக்கு போட்டுள்ளனர். நாங்கள் இந்த பொதுக்கூட்டத்தில் நடந்தவை குறித்து புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.


