ADDED : செப் 16, 2011 01:27 AM
அந்தியூர்: அந்தியூரில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய கர்ப்பிணி பெண், கணவன் கண் முன் லாரி மோதி பரிதாபமாக பலியானார்.
கவுந்தப்பாடி அருகேயுள்ள பெரியகவுண்டனூரை சேர்ந்தவர் மாதேஷ் (25); கூலித் தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (21) மூன்று மாத கர்ப்பிணி. அந்தியூர் நஞ்சமடைக்குட்டையில் உள்ள உறவினருக்கு உடல்நிலை சரியில்லையென்பதால், நலம் விசாரிக்க இருவரும் மொபெட்டில் சென்றனர்.
ஊர் திரும்பும் போது, சகுந்தலாவின் உறவினரான சந்தோஷையும் (18) அழைத்து கொண்டு, மொபெட்டில் மூன்று பேரும் வந்தனர். அந்தியூர் சிங்கார வீதியிலிருந்து, சத்தி பிரிவை கடக்கும் போது, சத்தியிலிருந்து மேட்டூருக்கு சென்ற லாரி, மொபெட் மீது பலத்த காயமடைந்த சகுந்தலா சம்பவ இடத்திலேயே, கணவன் கண் முன் துடிதுடித்து பலியானார். காயமடைந்த மாதேஷ் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், சந்தோஷ் அந்தியூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர்.


